கே.ராஜன் மறைவுக்கு,டி.ராஜேந்தர் இரங்கல்!

கே.ராஜன் மறைவுக்கு,
டி.ராஜேந்தர் இரங்கல்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய அன்புக்குரிய அண்ணன் கே.ராஜன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. அவர் தைரியமான மனிதர். தன்னம்பிக்கை உள்ளவர். அப்படிப்பட்டவர் ஏன் விரக்தி அடைந்தார். மனமுடைந்தார். சட்டென்று கூவம் நதியிலே குதித்தார். தன் உயிரை மாய்த்தார் என்ற செய்தி கேட்டு என்னால் நம்ப முடியவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அந்த துக்கம் தாளவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய திரை உலகத்தைச் சார்ந்த நண்பர்களுக்கும், அவருடைய இல்லத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்று, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்….

இப்படிக்கு,
இயக்குநர்,
திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *