
‘மர்மர்’
இயக்கம் – ஹேம்நாத் நாராயணன்
நடிகர்கள் – மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர்
இசை – கெவின் ஃபெட்ரிக்
தயாரிப்பு – எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன்
நான்கு யூடியூப் சேனல் இளைஞர்கள் காத்தூர் கிராமத்தில் உள்ள அமானுஷ்ய கதையை கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். பின் அதை வீடியோ டாக்குமெண்டாக தயார் செய்ய காத்தூர் கிராமத்திற்கே செல்கிறார்கள். காத்தூர் கிராமத்தில் மங்கை என்ற பெண்ணினுடைய ஆவி மக்களை பழிவாங்குகிறது. இன்னொரு பக்கம் பௌர்ணமி அன்று ஆற்றில் கன்னி மார்கள் குளிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி இந்த இரண்டு மர்மமான கதை உண்மையா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க தான் இந்த நான்கு இளைஞர்களும் கிராமத்திற்குள் செல்கிறார்கள். அதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை , படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கேமரா விசுவலில் தான் கதை செல்கிறது.
இதுவரை தமிழ் சினிமாவில் திகில், பேய் படங்கள் புதிது கிடையாது. ஆனால், ‘ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர்’ பாணியில் கதையை இயக்குனர் கொண்டு இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஹாலிவுட், இந்தி சினிமாவில் இந்த மாதிரியான படங்கள் வந்திருந்தாலும் தமிழில் இதுதான் முதல் முறை. திகில் ஊட்டுவதற்கு பெரும்பாலும் இரவு நேர காட்சிகளை தான் காண்பிப்பார்கள். பெரும்பாலும் பகல் நேர காட்சியை எடுத்து இரவு நேரம் மாதிரி லைட் போட்டு விடுவார்கள். ஆனால், இந்த படத்தில் அப்படி இல்லாமல் உண்மையாகவே இரவு நேரத்தில் தான் படபிடிப்பை நடத்தி இருந்தார்கள்.
பகல் நேரத்தில் சருகு, இலைகள், மரங்கள் இடையே நடக்கும் பயணம், இரவில் நெருப்பு வெளிச்சம், டார்ச் லைட்டில் என்று கதையை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதற்காக ஒளிப்பதிப்பாளர் ஜோசப் முழு பங்களிப்பையும் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் படங்கள் என்பது இசையமைப்பாளர் பின்னணி இசை அமைக்க கூடாது. பின்னணி ஒலிகளும் லைவாக இருக்க வேண்டும். அதை மனதில் கொண்டு தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை இயக்குனர் ஹேம்நாத் நாராயணன் முதல் இயக்கியுள்ளார், ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் படம் என்பதால் இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும், படத்தில் வரும் சத்தங்கள் பார்வையாளர்களை மிரட்டும் வகையில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஒலியுமே துல்லியமாக கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தினுடைய ஒலிஅமைப்பு, ஒளிப்பதிவு, லைட்டிங், கலரிங் எல்லாமே பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. விறுவிறுப்பை குறையாமல் இயக்குனர் கொண்டு சென்று இருக்கிறார்.
மொத்தத்தில் இந்த மர்மர் த்ரில்லரின் உச்சமாக இருக்கிறது.
Rating 2.8/5