’ராபர்’ படம் எப்படி இருக்கு?

Rating 3.3/5

’ராபர்’

இயக்குனர் – எஸ் எம் பாண்டி
நடிகர்கள் – சத்யா , டேனியல், ஜெய பிரகாஷ், தீபா
இசை – ஜோஹன் சிவனாத்
தயாரிப்பு – இம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் – கவிதா

நன்றாக படித்து விட்டு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதற்காக வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிரான், ஒரு சமயத்தில் கொலையும் செய்ய துணிகிறார். இதனால், தொழில் ரீதியான எதிரிகள் அவரை துரத்த, மறுபக்கம் பாதிக்கப்பட்டவர்கள் பழி தீர்க்க அவரை விரட்டுகிறார்கள். இவர்களிடம் இருந்து நாயகன் சத்யா தப்பித்து தனது குற்ற செயல்களை தொடர்ந்தாரா? இல்லையா ? என்பது தான் ‘ராபர்’ கதை.

வழக்கமான கதாபாத்திரத்தில் சத்யா நடித்திருக்கிறார், சத்யாவுக்கு இந்த வேடம் புதிதல்ல என்பதால் தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அப்பாவித்தனமான முகத்தோடும், அளவான பேச்சோடும் பயணித்திருப்பவர், குற்ற செயல்களில் ஈடுபடும் போது படம் பார்ப்பவர்களையும் பதற வைத்துவிடுகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார்,

முதன் முறையாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் டேனியல் போப், தனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார், சிறையில் கெத்தாக எண்ட்ரிக் கொடுத்து இறுதியில் வெத்தாக முடியும் செண்ட்ராயனின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.

ஜெயப்பிரகாஷ், தீபா சங்கர், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதையோட்டத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார்,தனது கேமரா மூலம் ரசிகர்களை அங்கும் இங்கும் நகர விடாமல் செய்துள்ளார் , மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜோகன் செவனேஷ், இசையமைத்துள்ளார் , பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது,

அனைவரிடமும் வரவேற்பை பெற்ற ’மெட்ரோ’ படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணனின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எம்.பாண்டி, ‘மெட்ரோ’ படத்தின் சில சம்பவங்களை போலவே இதிலும் காட்சிகளை வடிவமைத்துள்ளார், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வரும் நபர்களிடம் வழிப்பறி மற்றும் செயின் பறிப்புகளில் ஈடுபடுவது என்ற சம்பவங்களை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்,

மொத்தத்தில், ‘ராபர்’ விழிப்புணர்வு.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *