
’ஸ்வீட் ஹார்ட்’
இயக்குனர் – ஸ்விநீத் சுகுமார்
நடிகர்கள் – ரியோ ராஜ் , கோபிகா ரமேஷ் , அருணாசலம்
இசை – யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு – YSR ஃபிலிம்ஸ் – யுவன் சங்கர் ராஜா
ஒருவன் சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறான் . ஆனால், அவரது காதலி திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். பிரிவுக்குப் பிறகு தனது காதலி கர்ப்பமடைந்திருப்பதை தெரிந்து கொள்ளும் நாயகன், கருவை கலைத்துவிடும்படி சொல்கிறார். ஆனால் குழந்தை பெற்று கொண்டு நாயகனுடன் சேர்ந்து வாழ விரும்பும் நாயகி, தனது விருப்பத்தை வெளிக்காட்டாமல், காதலனின் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்க, நாயகன் காதலி வயிற்றில் வளரும் கருவை கலைத்தாரா? அல்லது அதன் மூலம் மனம் மாறினாரா ? என்பதை காதல் கலந்த நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது தான் இந்த ஸ்வீட் ஹார்ட்,
நடிகர் ரியோவின் இதற்கு முன்னர் வெளியான ஜோ படம் பலரிடம் நல்ல பெயரை அவருக்கு வாங்கி கொடுத்தது, எப்படியாவது காதல் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் ரியோ ராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், இந்தப் படமும் அதே போல காதல் காட்சிகளால் நிறைந்துள்ளது , நகைச்சுவை மட்டுமல்லாமல் காதல் காட்சிகள் சிறப்பாக நடித்துள்ளார்,
நாயகியாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ், தனக்கென்று தனி விருப்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் காதலனின் மனநிலையை புரிந்துகொண்டு சூழல்களை எதிர்கொள்ளும் பெண்களை பிரதிபலிக்கும் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பின்னர் சினிமாவில் இன்னும் அதிக வாய்ப்பிருக்கிறது ,
அருணாச்சலேஸ்வரன், பெளசி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். கதையின் நகர்வுக்கு முக்கிய பங்களித்துள்ளார்கள் ,
இந்தப் படத்தை தயாரித்துள்ள யுவன் சங்கர் ராஜாதான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார், அவரது இசையில் சில பாடல்கள் மனதை வருடுவது போல் இருந்தாலும், சில பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது, பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது, ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம், நாயகன், நாயகிக்கு அதிகமான க்ளோஷப்களை வைத்திருக்கிறார். காதல் காட்சிகள் நிறைந்த படம் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு படத்தை காட்சி படுத்தியுள்ளார்,
இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிரார், காதல் மூலம் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை பேச முயற்சித்திருக்கிறார். நாயகன், நாயகி இடையிலான காதல் கெமிஸ்ட்ரி தான் படத்தின் முக்கிய அம்சம் என்றாலும், சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருக்கிறார், காதலன், காதலி இடையிலான பிரிவுவையும், அதன் வலியையும் சொல்ல வரும் கதையை, கருக்கலைப்புக்கு முக்கியத்துவம் தரும்படியான திரைக்கதை அனைவரையும் நெகிழ செய்கிறது,
மொத்தத்தில், ‘ஸ்வீட் ஹார்ட்’ ஒரு காதல் அனுபவம்.
RATING 3.1/5