தரைப்படை படம் எப்படி இருக்கு?

தரைப்படை

நடிகர்கள் – பிரஜின், விஜய் விஸ்வா , ஜீவா தங்கவேல்
இயக்குனர் – ராம் பிரபா
இசை – மனோஜ் குமார் பாபு
தயாரிப்பு – பிபி வேல்முருகன்

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோடி கணக்கில் மோசடி செய்யும் கும்பல், அந்த பணத்தை தங்கம் மற்றும் வைரங்களாக மாற்றிக் கொள்கிறது. அந்த கும்பலின் தலைவரை கொலை செய்துவிட்டு அந்த தங்கத்தையும், வைரங்களையும் ஒருவன் கொள்ளையடிக்கிறார். அவரிடம் இருந்து அதை கொள்ளையடிக்க இன்னொருவர் முயற்சிக்கிறார். மறுபக்கம், மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை தேடும் இருவர் வைரங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த மூவரின் வாழ்க்கையில் பயணிக்கும் அந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களால் யார் யார்க்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது?, இவர்களின் பின்னணி என்ன?, இறுதியில் யார் இந்த தங்கம் மற்றும் வைரங்களை கைப்பற்றியது? என்பதை அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் சொல்வதே ‘தரைப்படை’.

இந்தப் படத்தில் இரண்டு நாயகர்கள் உள்ளன அதில் முக்கிய நாயகனாக பிரஜன் நடித்துள்ளார், படம் முழுவதும் ஒரே உடையில் உலா வருகிரார், தனது வழக்கமான நடிப்பை இந்தப் படத்திற்கு கொடுத்துள்ளார்,

மும்பையில் இருந்து வந்து தனது குடும்பத்தை தேடும் ஒருவர் பாட்ஷா ரஜினி போல் கோட் சூட் அணிந்துக் கொண்டு அடியாட்களுடன் வலம் வருவதோடு, நடப்பது, நிற்பது, உட்கார்வது, பேசுவது, சிகரெட் புகைப்பது என அனைத்திலும் ரஜினிகாந்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு தீபாவளிக்கு வெடிக்கும் துப்பாக்கி போல எதிர்ப்பவர்களை எல்லாம் சர்வசாதாரணமாக சுட்டுத் தள்ளும் விஜய் விஷ்வாவும் தனது வில்லத்தனத்தால் மிரட்ட முயற்சித்திருக்கிறார்.

இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கும் பிரஜன், ஜீவா, விஜய் விஷ்வா ஆகியோர் சண்டைகாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களால் முடிந்த உழைப்பை கொடுத்துள்ளார்கள் ,

இந்தப் படம் முழுவதும் சேஸிங் மற்றும் சண்டைக்காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், நமக்கு வித்தியாசமான பாணியில் இந்தப் படத்தில் காட்சி படுத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம்.

மேலும் இசையமைப்பாளர் மனோஜ்குமார் பாபுவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராம்பிரபா, கமர்ஷியல் ஆக்‌ஷன் கதையை பல்வேறு திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை மூலம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். பிற்காலத்தில் நல்ல கமர்ஷியல் இயக்குனராக உருவாக வாய்ப்புள்ளது, கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மூவரில் யார் வில்லன்?, யார் ஹீரோ? என்று யூகிக்க முடியாதபடி கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராம்பிரபா, அவர்களுக்கு இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டத்தை கையாண்ட விதம் மற்றும் தங்கம் மற்றும் வைரங்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் கைமாறுவது ஆகியவற்றின் மூலம் படத்தை சுவாரஸ்யமாக மட்டும் இன்றி பொழுதுபோக்காகவும் நகர்த்தி செல்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘தரைப்படை’ ஆக்ஷன் படை.

Rating 2.8/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *