விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிளான “சொல்லிடுமா” பாடல் வெளியானது

விஜய் ஆண்டனி நடிக்கும் ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிளான “சொல்லிடுமா” பாடல் வெளியானது

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி அவர்களின் 12வது தயாரிப்பான ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான “சொல்லிடுமா” பாடலை வழங்குவதில் படக்குழுவினர் பெருமை அடைகிறார்கள். விஜய் ஆண்டனியே இசையமைத்துப் பாடியிருக்கும் இந்த பாடல், அனைத்து வயதினரையும் சுண்டி இழுக்கும் வகையில் Energetic மற்றும் vibe ஆன பாடலாக அமைந்துள்ளது.

வசீகரிக்கும் பாடல் வரிகளைக் கொண்டு “சொல்லிடுமா” பாடல் இசையமைக்கப் பட்டிருக்கிறது.இசையமைப்பாளராகவும், பாடகராகவும் விஜய் ஆண்டனி மீண்டும் தனது தனித் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் வெளியீடு எப்பொழுது என்ற எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

பிரபல எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கிய ககன மார்கன், ஒரு கொலை மர்மம் சார்ந்த திரில்லர் வகையான படமாகும். தலைமைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனியுடன், அறிமுக நாயகன் அஜய் திஷான் வில்லனாக நடிக்கிறார். இந்த இருவரின் நடிப்பும் ரசிகர்களை நாற்காலி முனையில் அமர வைக்கும் என்பது உறுதி.

ஒளிப்பதிவாளர் S யுவாவின் மிக நுட்பமான ஒளிப்பதிவும், கலை இயக்குனர் A ராஜாவின் எதார்த்தமான கலைப்படைப்பும், அதோடு கூடுதலாக விஜய் ஆண்டனியின் இசை மற்றும் அழுத்தமான கதை ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து பார்வையாளர்களுக்கு ஒரு “Edge of the Thriller”சினிமா விருந்தாக அமையும் என்பது கூடுதல் உத்தரவாதம்.

“சொல்லிடுமா” பாடலில் உள்ள ஒவ்வொரு தருணங்களையும் கேட்டு மகிழுங்கள். மேலும் ககன மார்கன் படம் பற்றிய அப்டேட்டுகளுக்காக தொடர்ந்து இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *