சுமோ படம் எப்படி இருக்கு?

’சுமோ’

இயக்கம் – எஸ் பி ஹோசிமின்
நடிகர்கள் – சிவா , பிரியா ஆனந்த், யோஷினோரி , யோகி பாபு, வி டி வி கணேஷ்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பு – வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ஐசரி கணேஸ்

சென்னையை சேர்ந்த அலைச் சறுக்கு (Surfing) விளையாட்டு வீரர் ஒருவர், வழக்கும் போல் அலைச் சறுக்கு விளையாட கடலுக்கு செல்லும் போது, ஒருவர் கரை ஒதுங்கியிருக்கிறார். அவரை மீட்டு காப்பாற்றுகிறார். வேறு நாட்டவரான அவர் எந்த நாட்டவர் உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியாததோடு, தான் யார்? என்பதும் அந்த நபருக்கு நினைவுக்கு வராததால், அவரை பராமரிக்கிறார்.

இதற்கிடையே, கரை ஒதுங்கிய நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அந்நாட்டில் அவர் மிகப்பெரிய சுமோ மல்யுத்த வீரர் என்பதும் தெரிய வருகிறது. அவரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், சுமோ வீரர் மீண்டும் ஜப்பானுக்கு வருவதை விரும்பாத ஒரு கும்பல், அவரை அங்கு வரவிடாமல் தடுக்க முயற்சிக்க, அவர்களது முயற்சிகளை முறியடித்து, சுமோ வீரரை மீண்டும் ஜப்பானுக்கு அழைத்துச் சென்றாரா?, அவரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கும் கும்பல் யார்? எதற்காக தடுக்கிறார்கள், என்பதை கமர்ஷியலாக சொல்வது தான் ‘சுமோ’.

அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தனக்கு தானே கொடுத்துக் கொண்டு, தன்னைத்தானே கலாய்த்துக் கொள்ளும் சிவா, வழக்கம் போல் நகைச்சுவையாக பேசிக்கொண்டு காட்சிகளை கடத்தியிருக்கிறார். மேலும் நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்த், அழகு மற்றும் கவர்ச்சி நிறைந்த நடிகையாக நடித்துள்ளார்.

யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் ஆகியோர் செய்யும் காமெடி போதாது என்று, நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத், சுரேஷ் சக்கரவர்த்தி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கலும் நகைச்சுவைக்காக உழைத்துள்ளனர்,

நிவாஸ் கே.பிரசன்னா இசையில், பிள்ளையார் பற்றிய பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். மற்ற பாடல்கள் கதை நகர்விற்கு உதவியுள்ளது,  பின்னணி இசை நன்றாக இருந்தது, ஒளிப்பதிவு ராஜீவ் மேனன் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது, கேமராவில் அவரது வேலை நன்றாக இருந்தது,

இந்தப் படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.ஹோசிமின் ஒரு கமர்ஷியல் படத்தை, இயக்கியிருக்கிறார். காமெடி தான் திரைக்கதையின் பலம் என்பதை புரிந்து அதை சரியாக கையாண்டுள்ளார், சுமோ மல்யுத்த வீரரை சுற்றி கதை நகர்ந்திருப்பதால், சுமோ விளையாட்டு போட்டி பற்றிய கூடுதல் மற்றும் யாரும் அறிந்திராத தகவல்கள் படத்தில் இருந்தது திரைக்கதையின் மிகப்பெரிய பலம்

மொத்தத்தில், ‘சுமோ’ வழக்கமான சிவாவின் நகைச்சுவை அதிரடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *