
இயக்குநர் பேரரசு, நடிகர் ரவிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்!
எழுத்தாளராக அவதாரம் எடுத்த நடிகர் ரவிக்குமார், தான் எழுதிய ‘நான் ராமசாமி பேசுறேங்க’, ‘மகிழ்வித்து மகிழ்’ இரண்டு புத்தகங்களுக்கும் இயக்குநர் பேரரசு அவர்களிடம் அணிந்துரை பெற்றிருந்தார். இந்நிலையில் புத்தகத்தை இயக்குநர் பேரரசு அவர்களிடம் வழங்கி, வாழ்த்துக்கள் பெற்றார்!
என் "நெஞ்சை தொட்டாயே..!" திரைப்படத்தில் கதாநாயகனாகவும், "திகிலோடு விளையாடு..!" திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்த நடிகர் ரவிக்குமார் இப்பொழுது எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
கௌசல்யா ரவி என்ற தன் மனைவியின் பெயரை புனைபெயராக கொண்டு, வார மற்றும் மாத இதழ்களில் பல சிறுகதைகள் எழுதி வந்தவர், முதல் முறையாக,
"நான் ராமசாமி பேசுறேங்க..!"
"மகிழ்வித்து மகிழ்..!"
ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
@GovindarajPro