பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!

பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!

தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையான குயின்சி ஸ்டான்லி, மாடலாகவும், நடிகராகவும், ரியாலிட்டி ஷோ பிரபலமாகவும் மாறி, இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய நட்சத்திரமாகவும் இருக்கிறார். விளையாட்டு, ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு உலகங்களை இணைக்கும் தனித்துவமான பயணத்துடன், குயின்சி தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளார்.

தனது பயணம் குறித்து குயின்சி பகிர்ந்து கொண்டதாவது, “ஆரம்ப காலத்தில் நான் தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாக என் பயணத்தைத் தொடங்கினேன். பின்னர், கிரியேட்டிவ் துறையான மாடலிங் துறையிலும் அடியெடுத்து வைத்தேன். அது என்னை நடிப்புத் துறைக்கும் கொண்டு சென்றது. இசை வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிறகு எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ அமைந்தது” என்றார்.

தொலைக்காட்சியில் அவரது பயணம் அடுத்து சினிமாவுக்கும் கூட்டி சென்றது. அந்த அனுபவம் பற்றி பேசியபோது, “சீரியல்களில் பணிபுரிவது எனக்கு ஒழுக்கத்தையும் கேமரா அனுபவத்தையும் கொடுத்தது. ஆனால் திரைப்படங்களில் நடிப்பது வித்தியாசமான அதே சமயம் அதிக திருப்தி தரக்கூடிய ஒன்று. அதன் கதை சொல்லக் கூடிய முறையும் வேறு விதமாக இருக்கும்” என்றார்.

ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸில் அவரது கதாபாத்திரம் ‘நீலா’ ரசிகர்களால் பாராட்டப்பட்டது. “இது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான வெப்சீரிஸ். கலாச்சாரத்தைப் பற்றி கற்றுக்கொள்வதில் இருந்து உடல் ரீதியான மாற்றங்களைச் சந்திப்பது வரை என ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் பணிபுரியும் அனுபவத்தை அந்த வெப்சீரிஸ் கொடுத்தது. அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை இந்த வெப்சீரிஸ் எனக்குக் கற்றுக் கொடுத்தது. அடுத்து திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறேன். கமர்ஷியலான அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன்”

தனக்குப் பிடித்த நடிகர்களாக சூர்யா மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரை குறிப்பிடும் குயின்சி, அவர்களைப் போன்ற திறமையான நடிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார். மேலும் இயக்குநர்கள் மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி போன்றோருடன் பணிபுரியும் வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் சொல்கிறார். “தங்கள் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு இந்த இயக்குநர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் கதாபாத்திர வலிமையும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகள் அறிந்து வைத்திருக்கும் குயின்சி, “கதை சரியாக இருக்கும்போது மொழி ஒருபோதும் தடையாக இருக்காது. புது மொழிகளை கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். அதில் இன்னும் பல புது முறைகளைக் கற்றுக் கொள்ளப் போகிறேன். கிளாமர் மற்றும் போல்டான கதாபாத்திரத்தில் கதைக்குத் தேவைப்பட்டால் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

தொடர்புக்கு: காவ்யா மாதவன்,
Ph:7845579797
Mail: donetalents@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *