மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் பூவையார்“ கதை நாயகனாகிறார்!“ராம் அப்துல்லா ஆண்டனி”.

‘மாஸ்டர்’ படத்தில் விஜயுடன் ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் பூவையார்“ கதை நாயகனாகிறார்!
“ராம் அப்துல்லா ஆண்டனி”.

Annai Vailankanni Studios சார்பில், தயாரிப்பாளர்
TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் “ராம் அப்துல்லா ஆண்டனி” தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இயக்குநர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் காமெடியன் என அனைவரும் ஹீரோவாக மாறும் கலாச்சாரத்தில் இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி புகழ் பெற்ற பூவையார் (கப்பிஸ்) இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எளிய இளம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பூவையார், தன் தனித்துவமான குரலாலும், குணத்தாலும், சுட்டித்தனத்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். இறுதிப்போட்டி வரை கட்டாயமாக வர வைத்து அசத்தியவர். தளபதி விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடல் பாடியதோடு, விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து, பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

தற்போது அடுத்த கட்டமாக நாயகனாக இப்படம் மூலம் அறிமுகமாகிறார். இது திரை ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து, பலரும் பூவையாருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

தவறான பாதையில் செல்லும் பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பள்ளி மாணவர்கள் இணைந்து செயல்படும் உலகின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையை, சமூக அக்கறை கொண்ட படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் த.ஜெயவேல். இப் படத்தின் இறுதி கட்ட காட்சி, வசனம் அனைவரின் மனதை நிச்சயமாக உலுக்கும்.

Annai Vailankanni Studios நிறுவனத்தின் சார்பில், முதல் படைப்பாக தயாரிப்பாளர் TS கிளமென்ட் சுரேஷ் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

இப்படத்தில், மூன்று சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார் டைரக்டர். பூவையாருடன் இணைந்து இரண்டு பள்ளி மாணவர்களாக அஜய் அர்னால்ட் , அர்ஜூன் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் பிரபல நடிகர் நடிக்க பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது. மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார்.

முழு மூச்சுடன் படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்:

எழுத்து, இயக்கம் – த.ஜெயவேல்
ஒளிப்பதிவு – L.K.விஜய்
இசை – T.R.கிருஷ்ண சேத்தன்
எடிட்டர் – வினோத் சிவகுமார்
கலை – சீனு / எஸ்.இரளி மும்பை
பாடல் வரிகள் – சினேகன், T.ஜெயவேல்
ஸ்டண்ட் – சுரேஷ்
நடன இயக்குனர் – தீனா, I.ராதிகா
தயாரிப்பு மேலாளர் – ஏகாம்பரம்
ஸ்டில்ஸ் – சந்துரு
மக்கள் தொடர்பு – ஜான்சன்
டிசைனர் – கிப்சன் UGA
கேஷியர் – திருவேணி
நிர்வாக தயாரிப்பாளர் – R. பவானி
தயாரிப்பு – T S. கிளமென்ட் சுரேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *