
குட் டே
இயக்குனர் – நி. அரவிந்தன்
நடிகர்கள். – பிரதிவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள்
இசை – கோவிந்த் வசந்தா
தயாரிப்பு – மாங்க் பிக்சர்ஸ்-பிரதிவிராஜ் ராமலிங்கம்
ஒருவர் தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், தனது பிறந்த நாளிலேயே, பல்வேறு சிக்கல்கள் மற்றும் வேலைப் பழுவால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். வாழ்க்கையை விட்டுவிட நினைக்கும் அளவிற்கு நெருக்கடியில் உள்ள போது, ஒரு மதுவில் மயங்கிய நிலையில் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறார். அப்போது ஒவ்வொரு சந்திப்பும் அவருக்கு மறக்க முடியாத நகைசுவை நிறைந்த நிகழ்வாக இருக்கிறது, அப்போது அவர் ஒரு ஆபத்தில் உள்ள சிறுமியை சந்திக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மற்றும் அந்த இருவரும் ஒருவரையொருவர் எவ்வாறு மாற்றுகின்றனர் என்பது தான் இந்தப் படத்தின் கதை.
முதல் நாயகனாக நடிக்கும் படம் என்றாலும் பிரதிவிராஜ் ராமலிங்கம் எதார்த்தமாகவும், தாழ்த்திய நடிப்புடன் கதையின் ஆதாரமாக நிற்கிறார். நல்ல தேர்ந்த நடிகர்களை போலவே படம் முழுவதும் காண்கிறார்,
காளி வெங்கட், மைனா நந்தினி, போஸ் வெங்கட், பக்ஸ் உள்ளிட்டோர் குறைந்த நேரத்தில் தான் தோன்றினாலும், ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அனைத்து கதாபாத்திரமும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்,
இந்தப் படத்தை எழுத்தாளர் போர்ணா ஜெ.எஸ். எழுதியுள்ளார், நேர்மையான நகைச்சுவை, வலியுணர்வு மற்றும் உள்ளார்ந்த உணர்வுகளை சரியாக கலந்து காட்சிப்படுத்தியமைக்காக பாராட்டதக்கது. மனித உறவுகளின் அருமை மற்றும் வாழ்க்கையின் அன்றாட நுணுக்கங்களை இது அழகாகக் கூறுகிறது. இயக்குநர் அரவிந்தன், சிறந்த படைப்பாற்றலுடன் திரைக்கதையை கவனமாக கையாண்டுள்ளார். அறிமுகப் படம் என்றாலும் அதில் தன்னுடைய துல்லிய திரைக்கதையில் அனைவரையும் கவர்ந்துள்ளார்,
கோவிந்த் வசந்தாவின் இசை ஒரு முக்கிய பலமாக உள்ளது. பின்னணி இசை உணர்ச்சிகரமான தருணங்களை அதிகரிக்கிறது, பாடல்கள் கதை நயத்தை உயர்த்துகின்றன. பலமான எழுத்தும், ஆழமுள்ள இசையும் “Good Day”க்கு மீண்டும் மீண்டும் பார்க்கும் விதமான உணர்ச்சித் தன்மையை வழங்குகிறது. தொடர்ச்சியில் சில மெதுவான கட்டங்கள் இருந்தாலும், அவை திரைப்படத்தின் ஓட்டத்தை பாதிக்கவில்லை.
மொத்தத்தில், இந்த “Good Day” நல்ல ஃபீல் குட் டே
Rating 3.3/5