மார்கன் படம் எப்படி இருக்கு?

இயக்கம் – லியோ ஜான் பவுல்
நடிகர்கள் – விஜய் ஆண்டனி , அஜய் திஷான் , சமுத்திரக்கனி , பிரிகிடா
இசை – விஜய் ஆண்டனி
தயாரிப்பு – விஜய் ஆண்டனிஃபில்ம் கார்ப்பரேஷன்-மீரா விஜய் ஆண்டனி

ஒரு காவல் துறை அதிகாரி விஷ ஊசியால் பாதிப்பட்டு காவல்துறையில் இருந்து ஓய்வில் இருக்கிறார். அதே சமயம் அவருக்கு ஆனது போல் ஒரு பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு கருப்பாக்கி கொலை செய்கின்றனர். அதனால் அவர் அன் அபிசியலாக இந்த வழக்கை விசாரிக்க சென்னை வர, அங்கு தமிழறிவு என்ற ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்கிறார். சந்தேகப்பட்டது போலவே அனைத்தையும் செய்ய, அந்த நபருக்கு எதை பார்த்தாலும் அப்படியே நியாபகம் வைத்துக்கொள்ளும் திறமை இருக்க, பிறகு தான் தெரிகிறது அந்த கொலையை அவர் செய்யவில்லை என்று. பிறகு தமிழறிவு உதவியுடன் அந்த கொலைக்காரனை கண்டுப்பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

விஜய் ஆண்டனி எப்போதும் திரில்லர், வித்தியாசமான கதைக்களம் என்றால் அல்வா சாப்பிடுவது போல அவருக்கு, அப்படித்தான் காவல்துறை அதிகாரியாக படம் முழுவதும் ஒரு கேஸை கண்டுப்பிடிக்க அவர் போராடுவது என நன்றாகவே நடித்துள்ளார். வழக்கமான படங்களை விட இதில் சற்று அதிக அமைதியாகவே இருக்கிறார்.

அறிமுக நடிகர் தமிழறிவாக வரும் அஜய், விஜய் ஆண்டனிக்கு நிகரான கதாபாத்திரம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய் ஆண்டனி தாண்டி இந்த கேஸையே அவர் தான் கண்டிப்பிடித்து தீர்கிறார்.அதிலும் சித்தர் சக்தி கிடைத்து தண்ணீரில் மூழ்கி, நடக்காத ஒரு விஷயத்தை தன் ஆன்மா மூலம் தமிழறிவு பார்ப்பது என ஹாலிவுட் மைனாரிட்டி ரிப்போர்ட் அளவிற்கு ஒரு கான்செப்ட் வைத்துள்ளனர். சமுத்திரக்கனிக்கு இந்தப் படத்தில் வழக்கமான கதாபாத்திரம் தான் அதனை அவருக்கே உரிய பாணியில் செய்துள்ளார்.

இந்தப் படத்திற்கு இசை ஒரு முக்கிய பலம் என்றே சொல்லலாம் , ஏனெனில் படத்தின் கதைகேற்ப பயணித்துள்ளது, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் கேட்கும் வண்ண்ம இருந்தது, ஒளிப்பதிவாளர் எஸ் யுவா தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளார் , சொல்லப்போனால் படத்தையும் நம்மையும் ஒன்ற செய்து விட்டார்.

தொடர் கொலைகள், அதுவும் ஒரே பேட்டர்ன் யார் செய்திருப்பார்கள் என் பல சுவார்ஸ்யம் படத்தில் இருக்கிறது, படத்தின் மிகப்பெரும் பலம் ஆரம்பம் முதல் முடிவு வரை விசாரணை நோக்கியே படம் செல்கிறது, ப்ளாஸ் பேக் என்று பெரிய காட்சிகள் எல்லாம் இல்லை, அதே நேரத்தில் கிளைமேக்ஸ் இன்னும் அசத்தல் எது எப்படியோ ஒரு முக்கியமான மெசெஜ் உடன், அந்த மெசெஜ்க்கு ஏற்ற திரைக்கதையை உண்டாக்கியது சிறப்பு, இசை, ஒளிப்பதிவு அனைத்தும் நன்றாகவே உள்ளது.

மொத்தத்தில் விஜய் ஆண்டனியின் சஸ்பென்ஸ் படம் பிடிக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும்.

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *