மன்சூர் அலிகானின் மிக நீண்ட தலைப்பு கொண்ட “ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்”திரைப்படம், 34 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது!

மன்சூர் அலிகானின் மிக நீண்ட தலைப்பு கொண்ட “ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்”
திரைப்படம், 34 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது!

மன்சூர் அலிகான் முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி, இசையமைத்து, தயாரித்த படம். ‘கேப்டன் பிரபாகரன்’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அரசியல் வசனங்களுடன் வந்த படம்.

பாலு ஆனந்த் இயக்கி இருந்தார். தங்கர் பச்சன் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். சண்டைப் பயிற்சி சாகுல். நடனம் புலியூர் சரோஜா, சிவசங்கர், சலீம்பாபு, சம்பத்ராஜ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். தயாரிப்பு ராஜ்கென்னடி திரைப்பட நிறுவனம்.

மன்சூர் அலிகானுடன் நந்தினி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, வடிவுக்கரசி, அபிலாஷா, ஷர்மிளி, நாகேஷ், வி.கே.ராமசாமி, நெப்போலியன், ஜெய்கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், ஆர்.சுந்தரராஜன், குண்டு கல்யாணம், ஒருவிரல் கிருஷ்ணாராவ், குள்ளமணி, கள்ளபார்ட் நடராஜன், டி.கே.நடராஜன், பாண்டு, நெல்லை சிவா, போண்டா மணி என 50க்கும் மேற்பட்ட நடிகர் பட்டாளத்துடன் வெளியாகி, 100 நாட்கள் சக்கைப்போடு போட்ட படம்.

மன்சூர் அலிகான் இசையில், ஸ்வர்ணா லதா பாடிய மாமா மாமா பாடல், வாணி ஜெயராம், ராகவேந்தர் பாடிய மருதமருக்கொழுந்தே பாடல், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ஆட்டம் போடலாம், மற்றும் சந்திர போஸ் பாடிய ஊரும் கெட்டுப் போச்சு, சீர்காழி சிவ சிதம்பரம் பாடிய ஜக்கம்மா, மால்குடி சுபா பாடிய மணியடிச்சா சோறு ஆகிய பாடல்கள் மெகாஹிட் அடித்தது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது, ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *