ஃப்ரீடம் படம் எப்படி இருக்கு?

ஃப்ரீடம்

இயக்கம் – சத்யசிவா
நடிகர்கள் – சசிகுமார் , லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட்
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு – vஇஜய கணப்தி பிக்சர்ஸ் – பாண்டியன் பரசுராமன்

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை சம்பவம் அந்த காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அந்த சம்பவத்துடன் பலர் சம்மந்தப்படுத்தப்பட்டு தவறே செய்யாமல் பல சிரமங்களை சந்தித்தனர் .ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை வேலூர் சிறைக்கு அழைத்து வந்து காவல் துறை அடித்து துன்புறுத்தி விசாரணை என்கிற பெயரில் கொடுத்த சித்ரவதைகளையும் அந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்கிற உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஃப்ரீடம் படம் உருவாகியிருக்கிறது.

ஈழத் தமிழராக இரண்டாவது முறையாக தொடர்ந்து நடித்தவர் நம் சசிகுமார் தான், அவர் நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை மட்டுமில்லாமல் அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி தந்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. அந்த படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் ஈழத் தமிழராகவே சசிகுமார் நடித்துள்ளார். ஈழத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனையை ஏகப்பட்ட காமெடி காட்சிகளை வைத்து ஜாலியான பொழுதுபோக்கு படமாக கொடுத்து அபிஷன் ஜீவிந்த் ஹிட் அடித்த நிலையில், கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா ரத்தமும் சதையுமாக அவர்களது வலியையும் வேதனையும் காட்டியிருக்கும் படமாகவே ப்ரீடம் படம் உருவாகி இருக்கிறது. 4 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கே இருந்தால் இப்படியே செத்து மடிய வேண்டியது தான் என பிரிசன் பிரேக் செய்து தப்பிக்க நினைக்கும் இடங்களிலும் எப்படியாவது ப்ரீடம் பெற வேண்டும் என அவர் போராடும் காட்சிகளும் அட்டகாசம்.

சூர்யாவுடன் ஜெய்பீம் படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்த லிஜோமோல் ஜோஸ் இந்த ஃப்ரீடம் படத்தில் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக நிற்கிறது, அவர் வரும் காட்சிகளில் அவரது ஸ்ட்ராங்கான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்கிறார்.சசிகுமார், லிஜோமோல் ஜோஸை தாண்டி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் சுதேவ் நாயர் கலக்கியிருக்கிறார். மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்குனரின்பணி அற்புதமாக திரையில் தெரிகிறது,குறிப்பாக சிறை காட்சிகளில் உதயகுமாரின் ஒளிப்பதிவு கிளாப்ஸ் வாங்குகிறது.

ராஜீவ் காந்தி கொலையை சுற்றி அகதிகள் முகாமில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த சித்ரவதைகளை கண்முன்னே காட்டும் வரலாற்று படமாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்ததே இயக்குநர் சத்யசிவாவுக்கு வெற்றி தான். அந்த காலத்தில் தவறே செய்யாமல் அதற்கு தண்டணை பெறுவது ஒன்றும் புதிதல்ல என்பது தெரிகிறது, இந்த காலத்திலும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,

மொத்ததில் இந்த “ஃப்ரீடம்” சுதந்திரத்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்தும்.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *