
‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட புரொமோஷன் டூரை கொடியசைத்து தொடங்கி வைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு!
தமிழ்நாடு முழுவதும் வலம் வரவுள்ள ‘அரிகொம்பன்’ யானை! செல்ஃபி எடுத்து பரிசுகளை வெல்ல ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு!
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
‘மேஜிக் பிக்சர்ஸ்’ தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் புரொமோஷன் டூரை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
யானையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகளை வித்தியாசமான முறையில் முன்னெடுக்கும் வகையில், ‘அரிகொம்பன்’ யானையின் பிரம்மாண்ட மாதிரி உருவம் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் சிறப்பான புரொமோஷன் டூர் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புரொமோஷன் டூரின் சிறப்பம்சமாக, ‘அரிகொம்பன்’ யானையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மேஜிக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேக் செய்யும் ரசிகர்களுக்கு, குலுக்கல் முறையில் மொபைல் போன், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம், 1980களில் வனப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் மற்றும் யானையைச் சுற்றி நிகழும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் யானையை மையமாகக் கொண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘கும்கி’ போன்ற சிறந்த படங்களின் வரிசையில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடனும் வித்தியாசமான திரை அனுபவத்துடனும் ‘அரிகொம்பன்’ உருவாகியுள்ளது.
ஆக்ஷன், திரில்லர், டிராமா என அனைத்து அம்சங்களும் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ரசிகர்களைக் கவரும் விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுபூர்வமான காட்சிகள், பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கும் வகையிலான சுவாரஸ்யமான கதையம்சத்தையும் இப்படம் கொண்டுள்ளது.
இப்படத்தில் இயக்குநர் மிதுன் மகேஸ்வரன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். வில்லனாக அஜய் நடித்துள்ளார். மேலும், தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், சுப்பிரமணிய சிவா, ஆதிரா, மூ. ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார். இசையுலகின் முன்னணி கலைஞர்களான தேனிசைத் தென்றல் தேவா, ஜி.வி. பிரகாஷ் குமார், சின்மயி, வேல்முருகன் உள்ளிட்டோர் இப்படத்தின் பாடல்களில் பங்களித்துள்ளனர்.
கேரளத் திரையுலகைச் சேர்ந்த திறமையான ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ். அனிஷ் லால் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வனப்பகுதியின் இயற்கை எழில், மலைவாழ் மக்களின் வாழ்வியல் மற்றும் யானையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான காட்சிகளைத் தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்து, வெளியிட்டு, திரையுலகிற்குப் பெருமை சேர்த்துவரும் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள், ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் புரொமோஷன் டூரை கொடியசைத்து தொடங்கி வைத்தது படக்குழுவினருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் அளித்துள்ளது.
அவரது வாழ்த்துகளுடனும் ஆதரவுடனும் தொடங்கியுள்ள இந்த வித்தியாசமான புரொமோஷன் டூர், தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடையே ‘அரிகொம்பன்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேஜிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் சமூக ஊடக நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் ‘அரிகொம்பன்’ படக்குழுவினர் அன்புடன் எதிர்பார்க்கின்றனர்.
டிசம்பர் 11 முதல் திரையரங்குகளில் சந்திப்போம்!
நன்றி!
அன்புடன்,
Magic Picturees
ஷேக் PR (Shiek PR)