தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்தை திறந்துவைத்த இசைஞானி இளையராஜா !

தேனிசைத் தென்றல் தேவாவின் திருவுருவப் படத்தை திறந்துவைத்த இசைஞானி இளையராஜா !

மறைந்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 2026 நவம்பர் 20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
மேலும், தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘Deva The Tribute’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன், அமைச்சர் ஸ்ரீநாத், அமைச்சர் வன்னி அரசு, திலீப் குமார் சென்னை மத்திய மாவட்ட தெற்கு செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன், நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குனர் சங்க தலைவர் ஆர். கே. செல்வமணி, மற்றும் இயக்குநர் பி. வாசு, ராதாரவி, பாண்டியராஜன், ஹிப் ஹாப் ஆதி, டி. இமான், ராமராஜன், வைரமுத்து, பா. ரஞ்சித், நடிகர் சவுந்தர் ராஜா நடிகர் ஜெய், ஓய். ஜி. மகேந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய தேவாவின் புதல்வர் ஸ்ரீகாந்த் தேவா கலந்துகொண்ட அமைச்சர்கள் முன்னிலையில்

  1. தேவா அவர்களுக்கு மணிமண்டபம்
  2. பத்மநாபன் தெரு விற்கு தேவா பெயர் வைக்க கோரி
    3.இன்றைய நாளை (நவம்பர்20 ) கானா தினம் என்று அறிவிக்க கோரி.. ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
    நிகழ்வில் கலந்துகொண்ட திரையுலக பிரமுகர்களும் இசைக் கலைஞர்களும் ‘இது வெறும் பிறந்தநாள் நிகழ்ச்சி அல்ல; தமிழ் திரையிசையில் தனக்கெனத் தனி சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்ட ஒரு இசை மேதைக்குச் செலுத்தப்பட்ட மரியாதை ‘ என்று மனம் நெகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *