கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக, சங்கத்தின் தலைவர் நாகா தலைமையில், செயலாளர் கவிதாலயா வீ.பாபு மேற்பார்வையில், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்தநாள் சிறப்பாக நடைப்பெற்றது

கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக, சங்கத்தின் தலைவர் நாகா தலைமையில், செயலாளர் கவிதாலயா வீ.பாபு மேற்பார்வையில், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்தநாள் சிறப்பாக நடைப்பெற்றது. கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் பலகை நிறுவப்பட்டுள்ள இடத்தில், கே.பாலசந்தர் திருஉருவ படத்திற்கு, கே.பாலசந்தர் அவர்களின் மகள் புஷ்பா கந்தசாமியும், மருமகன் கந்தசாமி, திரையுலக பிரபலங்களும், மைலாப்பூர் மாநகராட்சியின் அதிகாரிகளும், மற்றும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளும், ரசிகர்களும் இணைந்து மலர் தூவியும்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா கந்தசாமியும்,
கந்தசாமி அவர்களும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகத்தில் கெளரவ ஆலோசகர்களாக இணைந்துக் கொண்டனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கே.பாலசந்தர் திருஉருவ சிலைக்கு மலர் மாலை சூட்டி, மரியாதை செலுத்தப்பட்டது.

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி நிறுவன தலைவர் C.N.இராமமூர்த்தி தலைமையில், அன்னை தர்ம அறக்கட்டளையின் சங்க தலைவர் இயக்குநர் S.சங்கர், தமிழ் திரையுலகை சார்ந்த சில பிரபலங்களும் இணைந்து, தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையில் வசிக்கும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *