
மக்கள் நாயகன் ராமராஜன் நன்றி தெரிவிக்கிறார்…
இன்று எனது பிறந்த நாளினை, நான் பிரமிக்கும் நாளாக உணரும் படியான எண்ணற்ற மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட நற்பணிகளை செய்த தமிழகம் முழுவதும் உள்ள என் ரசிகர் மன்ற நிர்வாகிகள், சகோதரர்கள் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றி!
வாழ்த்துக்கள் தெரிவித்தும், பிரார்த்தனைகள் செய்தும், உங்கள் அன்பின் வெளிப்பாட்டினை நான் அன்பனாய் அறிவேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய என் நெஞ்சில் நிறைந்த திரைத்துறை சார்ந்த நண்பர்களுக்கும், பெருமதிப்புமிகு பத்திரிகை தொலைக்காட்சி ஊடக மீடியாத்துறை நண்பர்களுக்கும், யூடியூப்பர்ஸ், சினிமா சார்ந்த சேனல் கிரியேட்டர்ஸ்களுக்கும், என் வளர்ச்சியில் அன்றும் இன்றும் பெரும் பங்காற்றிவரும் பிஆர்ஓ க்கள், என் உறவினர்கள், நண்பர்கள்,மற்றும் அன்பு பாராட்டி வரும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், நட்புள்ளம் கொண்ட பல்வேறு சங்க தலைவர்கள், அமைப்பு சார்ந்த தோழர்கள், அனைத்து நடிகர்களின் ரசிக பண்பாளர்கள், அன்று முதல் இன்று வரை ஆதரவளித்து வரும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள், உங்கள் அனைவருக்கும் இந்த ராமராஜனின் மனமார்ந்த நன்றி!
உங்கள் அனைவரின் வாழ்த்தையும் அன்பையும் என் உதவியாளர் நாகராஜன் மூலம் அனைத்தையும் அறியப்பெற்றேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் “கடவுள் தந்த பரிசு” உங்கள் அனைவருக்கும் பிடிக்கக் கூடிய அதே வேளையில், எனக்கு மிக முக்கியமான ஒரு படமாக நிச்சயம் இது இருக்கும்.
எல்லோரும் இன்றளவும் கொண்டாடி வரும் மாபெரும் சாதனை படைத்த “கரகாட்டக்காரன்” மறுவெளியீட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து தரமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதோடு, மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும், ஆசிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை என் இதய மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்…
நன்றி! நன்றி! நன்றி!
–அன்பன்
ராமராஜன் Ex. MP
நடிகர் – இயக்குநர்