
மையல்
இயக்கம் – ஏழுமலை
நடிகர்கள் – சேது , சம்ரிதி தாரா , பி எல் தேனப்பன்
இசை – எஸ் அமர்கீத்
தயாரிப்பு – ஐகான் சினி கிரியேஷன் – அனுபாமா விக்ரம் சிங்
ஆடு திருடும் ஒருவன், ஒருமுறை திருடி விட்டு தப்பி ஓடி வருகிறான். அப்போது ஒரு கிணற்றுக்குள்ள தவறி விழுந்து விடுகிறான். அதனால் காலில் பலத்த காயம். அதே நாள் இரவில் ஒரு வயதான தம்பதியரை வெட்டிக் கொலை செய்கின்றனர். ஹீரோயின் சம்ரிதி கிணற்றுல விழுந்த சேதுவைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறாள். சம்ரிதி பாட்டியுடன் இருக்கிறாள்.சிறிது நாட்களில் இருவருக்கும் காதல் வந்து விடுகிறது. இது பாட்டிக்குத் தெரிந்ததும் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். பின் என்ன ஆனது? கொலை செய்தது யார் என்பதுதான் படத்தின் கதை.
சேது யதார்த்தமான நடிப்பில் உள்ளம் கவர்கிறார். அருமையான நடிப்பு. போலீஸ் அவனை கைது செய்த பின் காதலியை பிரிந்து விடுவது போன்ற காட்சிகளில் அசத்தலாக நடித்துள்ளார். ஹீரோயின் சம்ரிதி அருமையான நடிப்பு. கிராமிய காதல் அழகாக மலர்ந்துள்ளது. சம்ரிதி பாவாடை, தாவணியில் ரொம்ப அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இந்தப் படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இயற்கை சூழல் நம்மை அழைக்கும் வண்ணம் அற்புதமாக செய்துள்ளார், அமர்கீத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார், பாடல்கள் நன்றாக இருந்தது பின்னணி இசை அதை விட நன்றாக இருந்தது ,
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் சேதுவுக்கு உறவினர் என்பதால் படத்தின் கதைக்காக 2 வருஷம் மெனக்கிட்டுள்ளாராம். . சாதாரணமாக இப்போதெல்லாம் ரௌடி, திருடன், கொலைகாரன் மேல தான் பெண்களுக்குக் காதல் வருகிறது. அதுதான் இங்கும் காட்டப்படுகிறது. லொகேஷன் அருமை. மலை அழகு கண்களைக் குளிர்விக்கிறது.
மொத்தத்தில் இந்த மையல் ஒரு நல்ல கிராமத்து காதல் கதை .