
நரிவேட்டை
இயக்குனர் – அனுராஜ் மனோஹர்,
நடிகர்கள் – டோவினோ தாமஸ் , சேரன் , சுராஜ்
இசை – ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பு – இந்தியன் சினிமா கம்பெனி – திப்புசன்
ஒரு காட்டில் வாழும் மக்கள் தங்கள் இருப்பிடம் தேவைகாக சிறு சிறு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே சமயம் படத்தின் நாயகன் கையில் ஒரு பைய்யுடன் தலைமறைவாக இருக்க, அவரை போலிஸ் தேடுகிறது. அங்கிருந்து பின்னோக்கி, செல்கிறது , கவர்மெண்டில் உயர் அதிகாரி வேலை தான் என்று இருக்கிறார். அப்போது வேலையே இல்லாத காரணத்தை காட்டி காதலி உட்பட எல்லோரும் திட்ட, கிடைத்த கான்ஸிடபுள் வேலைக்கு செல்கிறார்.
பிடிக்காத வேலை என்றாலும் யுனிபார்ம் போட்ட தைரியத்தில் ஒருவரை நாயகன் தாக்க, அவரை பெரிய போலிஸ் அதிகாரியே கண்டிக்கின்றனர். இந்த நிலையில் அவனுடன் சேர்த்து பல போலிஸார்கள் படத்தின் ஆரம்பத்தில் மலைவாழ் மக்கள் சிறு போராட்டம் நடத்தினார்களே அவர்கள் பெரிய போராட்டமாக நடத்த திட்டமிடுகின்றனர். அந்த இடத்திற்கு சென்ற நாயகனின் வாழ்க்கையே மாற்றும் பல சம்பவங்கள் நடக்க, இவரை ஏன் இப்போது போலிஸ் தேடுகிறது அந்த ஊரில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
டொவினோ போலிஸ் கதாபாத்திரம் என்றாலே அவருக்கு அல்வா சாப்பிடுவது போல, ஆனால், இதில் ஒரு கான்ஸிடபுள் ஆக எந்த அதிகாரமும் இல்லாமல் புடிக்காத வேலையை அவர் செய்ய, கடைசியில் அது அவரை எந்த அளவிற்கு செல்வது என்பதை தன் முகத்தில் அவர் காட்டிய விதம் டொவினோ திரை பயணத்தில் இந்த வர்கீஸ் கதாபாத்திரம் ஒரு மறக்க முடியாத ரோல் தான்.
ஆரம்பத்தில் மலைவாழ் மக்கள் போராட்டத்தின் போது ஏம்பா இந்த வேலிய உடைச்சிங்க, போட்டு கொடுங்க என எண்ட்ரி ஆகி, அடுத்தடுத்து பல நாச வேலைக்கு மிக முக்கிய புள்ளியாக விளங்கும் சேரன் நெகட்டிவ் சைட் நடிப்பு ரசிகர்களுக்கு கடுக் அதிர்டச்சி தான்.
இந்த்ப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய் , பாடல்களை காட்டிலும் பிண்ணனி இசைதான் படத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது அதை சிறப்பாக செய்துள்ளார், மலையாள படங்களில் காட்சிகள் அனைத்தும் இயற்கை சூழலில் நம்மை ஆழ்த்திவிடும் அதே போல இந்தப் படத்திலும் சிறப்பான பணியை செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய்.
அரசாங்கம் சொல்வதை செய்யும் ஒரு போலிஸ் அதிகாரி, இங்க பாசம், நேசம், எமோஷ்னல் என எதற்கும் இடைமில்லை என போலிஸ்காரர்கள் மற்றும் இந்த சிஸ்டத்தின் கொடூரத்தை தோல் உரித்து காட்டியுள்ளது கிளைமேக்ஸ். அதே நேரத்தில் நீதித்துறை ஒன்று உள்ளது, அவர்களிடமிருந்து எந்த கொம்பனும் தப்பிக்க முடியாது, அதற்கு ஒருவர் மனம் திறந்தினாலே போதும், என டொவினோ கொடுக்கும் வாக்குமூலம் ஒரு அரசாங்கத்திற்கே அச்சம் வர வைக்கும் என்பதையும் இயக்குனர் காட்டிய விதம் சிறப்பு. பல போராட்டங்கள் கலவரங்களாக எப்படி மாறுகிறது. கடைசியில் அரசாங்கம் அதை தங்ககுக்கு சாதகமாக எப்படி மாற்றுகிறது என்பதை பல அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன் காட்டியுள்ளனர். எந்த துறை என்றாலும் நல்லவர்களும் இருப்பார்கள் என்பது போல் ட்வின் வழிகாட்டும் சூரஜ் நடிப்பு ரசிக்க வைக்கின்றது. எந்த காலகட்டத்திலும் இந்த துப்பாக்கியை மட்டும் பயன்படுத்த கூடாது போன்ற வசனம் கவனிக்க வைக்கிறது.
மொத்தத்தில் இந்த ” நரிவேட்டை ” பல சஸ்பென்ஸ்களின் இணைப்பு,
Rating 3.5/5