
ஜின் த பெட்
இயக்கம்: டி ஆர் பாலா
நடிகர்கள்: முகேன், பாவ்யா டிரிகா, வடிவுக்கரசி, பாலசரவணன், ராதாரவி, நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வினோதினி, ரித்விக்,
இசை: விவேக் மெர்வின்
தயாரிப்பாளர்: டி ஆர் பாலா
மலேசியாவில் நட்சத்திர விடுதியில் பாடகராக இருக்கும் ஒருவன், ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில் அங்கிருந்து சென்னை வர தயாராகிறார். இந்நிலையில், பழங்கால பொருட்கள் விற்கும் கடைக்குச் செல்லும் அவன் , அங்கு ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஜின்’னை வாங்கிக் கொள்கிறார். ஜின் என்பது ஆவி போன்ற ஒரு மாய பொருள். ஜின்களில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. அதில் அவன் வாங்கிக் கொண்டது நல்ல ஜின். மலேசியாவில் இருந்து அதனை சென்னைக்கு எடுத்து வருகிறார். ஜின்’னை வாங்கியதில் இருந்து தனக்கு நல்லதாக நடக்கிறது என்று நினைத்துக் கொண்டு அதனை தனது வீட்டிலேயே வைத்துவிடுகிறார் . ஆனால், ஜின் வந்ததில் இருந்து வீட்டில் அபசகுணமாக இருப்பதாக அவனது வீட்டில் கூறுகின்றனர்.இந்நிலையில், ஒரு பெண்ணை காண்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள, இந்த சந்திப்பானது காதலில் முடிய, காதல் திருமணத்தில் முடிகிறது. இவர்களது வாழ்க்கை நல்லதாக சென்று கொண்டிருக்க, அந்தப் பெண் வீட்டிற்கு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்க, இதற்குக் காரணம் தான் கொண்டு வந்த ஜின் தான் என்று நினைத்து, அதனை தூக்கி வெளியே எறிந்து விடுகிறார் .அதன்பிறகு என்ன நடந்தது.? அவரை ஜின் சுற்றி சுற்றி வர என்ன காரணம்.?? என்ன என்பதே இந்த “ஜின் த பெட்” படம்
நாயகன் முகேன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். காட்சிகளில் அழகாக தனது நடிப்பின் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவரே சரியான தேர்வு என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பை வாரிக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும், ஒரு சில இடங்களில் இன்னும் பெட்டராக கொடுத்திருந்திருக்கலாமே என்ற எண்ணத்தையும் வர வைத்திருக்கிறார் முகேன்.
காட்சிகளில் அழகு தேவதையாக வந்து காட்சியளித்திருக்கிறார் பாவ்யா. காமெடி காட்சிகளை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் பால சரவணன். சீனியர் நடிகர்களும் தங்களது வேலைகளை சரியாக செய்திருக்கின்றனர். வில்லன்களாக வந்த ராதாரவி மற்றும் அவரது மகனாக வந்தவர் மிகவும் செயற்கைத் தனமான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. அர்ஜூன் ராஜா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் , மேலும் விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார், பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தது, பிண்ணனி இசை பயத்தை ஏற்படுத்தியது.
நல்ல ஜின் மற்றும் தீய ஜின் இரண்டுக்குமான ப்ளாஷ் பேக் காட்சிகளை சற்று சுவாரஸ்யமாக கொடுத்திருந்தார் இயக்குனர். வசனத்திலும் நன்றாகவே தனது உழைப்பைக் கொடுத்திருக்கிறார். திரைக்கதையை இன்னும் சற்று பரபரப்பாக கொடுத்திருந்திருக்கலாம். முழுக்க முழுக்க காமெடிக்கென முக்கியத்துவம் கொடுத்து, இன்னும் சற்று சுவாரஸ்யத்தோடு திரைக்கதை அமைத்து நகர்த்திக் கொண்டு சென்றிருந்தால், ஜின் இன்னும் அதிகமாகவே ரசிக்க வைத்திருந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த “ஜின் த பெட்” அனைவரையும் பயமுருத்தும்.
Rating 3/5