குபேரா படம் எப்படி இருக்கு?

குபேரா

இயக்குனர் – சேகர் கம்முலா
நடிகர்கள் – தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா
இசை – தேவி ஶ்ரீ பிரசாத்
தயாரிப்பு – ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் – சுனில் நரங், புஷ்கர் ராம் மோகன்

வங்க பெருங்கடலில் ஒரு பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதை தெரிந்துகொள்ளும் கார்பரேட் முதலாளியான நீரஜ் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் காண்டிராக்டை கைபற்றுகிறார். பதிலுக்கு அமைச்சர் முதல் பிற அரசியல்வாதிகளுக்கு ஒரு லட்சம் கோடி டீல் பேசப்படுகிறது. இந்த பணத்தை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் கைமாற்ற முன்னாள் சிபிஐ அதிகாரியான தீபக் பயண்படுத்தப் படுகிறார். நேர்மையான சிபிஐ அதிகாரியாக இருந்த தீப்க் மீது பொய் வழக்கு போட்டு அவரை சிறைக்கு அனுப்புவதால் விரக்தியாகி இந்த ஊழலில் அவரும் கலந்துகொள்கிறார். பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாமல் பணத்தை கைமாற்ற ஐந்து பிச்சைக்காரர்களை தேர்வு செய்து அவர்களை பினாமியாக மாற்றி அவர்கள் மூலம் பணத்தை கைமாற்ற திட்டமிடுகிறார். வேலை முடிந்ததும் ஒவ்வொருவராக கொலை செய்கிறார்கள். இந்த ஐந்து பிச்சைக்காரர்களில் ஒருவர்தான் அப்பாவியான கதை நாயகன் தேவா தேவா வங்கி கணக்கில் இருக்கும் 10 ஆயிரம் கோடி கைமாறியதா. இந்த கும்பலிடம் இருந்து தேவா எப்படி தப்பித்தார் ? குபேரா படம் சொல்ல வருவது என்ன என்பது மீதிக் கதை

ஒரு சாமானியனுக்கான எந்த அடையாளமும் இல்லாத பிச்சைக்காரனுக்கு அரசியல் அதிகார பலமும் , கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் கார்பரேட் வில்லனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் குபேரா படத்தின் ஒன்லைன். முடிந்த அளவிற்கு கதையின் மைய உணர்வை சிதைக்காமல் அதே நேரத்தில் விறுவிறுப்பான ஒரு கதையை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள தனுஷ் , ராஷ்மிகா ,நாகர்ஜூனா, ஜிம் சர்ப் தங்களது உச்சபட்ச நடிப்பை வழங்கியும் இருக்கிறார்கள். ஆனால் 3 மணி நேரத்திற்கு நீளும் படமும் அங்கங்கு தொய்வடையும் திரைக்கதையும் , தேவைக்கு அதிகமான எமோஷனை கொட்டும் காட்சிகளும் படத்திற்கு முட்டுக்கட்டையாக அமைகின்றன

நேர்கோட்டில் சொல்லப்படும் கதை குபேரா. கதை என்ன, யார் வில்லன் , படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை நிதானமாக கட்டமைக்கிறார்கள். இருபது நிமிடங்கள் கழித்தே நாயகன் அறிமுகப்படுத்தப் படுகிறார். முதல் பாதி முடியும் கட்டத்தில் தான் நாயகி ராஷ்மிகா அறிமுகமாகிறார்.

இதனிடையில் தனுஷ் ஏன் பிச்சைக்காரனாக மாறினார் என்பதற்கு ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் வந்து போகிறது. இதற்கிடையில் பாக்கியராஜ் , ஜெயபிரகாஷ் என பல கதாபாத்திரங்கள் படத்தில் வந்து பல திருப்பத்தையும் ஏற்படுத்தியது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற சுவாரஸ்யத்தை உருவாக்கி கொண்டே இருந்தனர்,

எல்லா விதமான மக்களையும் எளிதில் கவரக்கூடிய ஒரு ஒன்லைன்தான் குபேரா. பணத்தின் மேல் ஆசை இல்லாத , எழுத படிக்க தெரியாத ஒரு அப்பாவியாக இருக்கிறார் தேவா. ஒரு சாமானியனாக தனுஷ் நன்றாக பொருந்தியிருக்கிறார். அந்த சாமானியனாக இருப்பது தான் அவரது பலம். ஆனால் அத்தனை பெரிய கார்பரேட் வில்லனை ஒரு பிச்சைக்காரன் எதிர்த்து நிற்கும் போது பார்வையாளர்களுக்கு ஒரு உணர்வெழுச்சி ஏற்பட வேண்டுமே. அது எதுவும் நடப்பதில்லை. பாதியில் இருந்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் நன்றாக இருந்தது,

நேரடி தெலுங்கு படம் என்பதால் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற மீட்டரில் தனுஷ் நடித்துள்ளார்.

தேவிஶ்ரீ பிரசாதின் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம்,

எளிதில் ஒன்றிவிட முடியும் என்பதாலும் தேவையில்லாத மசாலா குப்பைகள் இல்லாமல் நேர்மையான ஒரு படமாக இருப்பதாலும் குபேரா ஒரு நல்ல படமாக வந்துள்ளது,

மொத்தத்தில் இந்த “குபேரா” சினிமா ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *