
பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, நான்கு முறை தேசிய விருதுகளையும் எண்ணற்ற மாநில அரசின் விருதுகளையும் வாங்கிக் குவித்த தென்றலிசைப் பாடகி, தேன்குரல் தேவகி எஸ்.ஜானகி அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகின்றது.
‘நெஞ்சம் பாடும் புதிய ராகம், தாளம் உன்னைத் தேடுதே’ என்று நினைவில் நின்ற, நெஞ்சில் ஒரு ராகம், தந்து விட்டாரே நீங்காத சோகம்…
‘வசந்தம் பாடி வைகை ஓடிவர இளமைகூடி வர இனிமை தேடி வர’ என்று என் மெட்டுக்கு மெருகேற்றியவர், பாட்டுக்கு அமுதூட்டியவர்…
சந்தனக் காற்றாம், சங்கதி ஊற்றாம், சங்கீதக் குயிலாம் என்னுடைய ‘சம்சாரம் சங்கீதம்’ படத்திலே என் மகன் சிலம்பரசனுக்காக ‘ஐயம் எ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்’ என்று பாட்டு படித்தாயே, முத்திரை பதித்தாயே, இன்று நீங்காத நித்திரைக்குச் சென்று விட்டாயே என்று என்னுடைய நெஞ்சம் நீங்காத சோகத்தைக் கொண்டு விட்டது.
அம்மையாரை இழந்து வாடும் அவரது இல்லத்தாருக்கும் இந்திய கலை உலகத்தாருக்கும் ரசிகர்களுக்கும் நேயர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
இப்படிக்கு
திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்
@GovindarajPro