உலக கின்னஸ் சாதனையாளர் பிரேம்நாத் வழங்கும் ‘நாட்டியாலயா 35ம் ஆண்டு துவக்க விழா’

உலக கின்னஸ் சாதனையாளர் பிரேம்நாத் வழங்கும் ‘நாட்டியாலயா 35ம் ஆண்டு துவக்க விழா’ நிகழ்ச்சி சென்னை திநகர் சர் பிட்டி தியாகராயர் ஹாலில் நடைபெற்றது!

ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகளுடன் விழா பிரமாண்டமாக நடைப்பெற்றது. அதிகமான மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்தியதற்காக உலக கின்னஸ் சாதனை விருது நாட்டியாலயா பிரேம்நாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது!

விழாவில் முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் திநகர் சத்யா, வி.என்.ரவி, கே.பி.கந்தன், வெங்கட்ராமன், தயாரிப்பாளர் சேலம் வேங்கை அய்யனார், ஆனந்த்ராஜ், இயக்குனர் அம்மா ராஜசேகர், நடிகர்கள் ரோபோ சங்கர், கிங்காங், ஜூலி பாஸ்கர், நாமக்கல் எம்ஜிஆர், சாய் கோபி, நடிகைகள் ஜூலி, பிரியங்கா ரோபோ சங்கர், முத்துலட்சுமி, சுஜி பிரதீபா, தனலட்சுமி, தொழிலதிபர்கள் டாக்டர் சுவாமிநாதன், கதிரவன், தங்கப்பன், சிவக்குமார், சின்னையா, இளையமாறன், நடன இயக்குனர்கள் அசோக் ராஜா, பிரதீப், பிஆர்ஓ கோவிந்தராஜ் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அனைவரையும் உலக கின்னஸ் சாதனையாளர் ‘நாட்டியாலயா’ பிரேம்நாத் வரவேற்றார்!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *